மோடிக்கு குவிந்து வரும் உலக நாட்டு தலைவர்களின் வாழ்த்துகள்

Home

shadow

            மோடிக்கு குவிந்து வரும் உலக நாட்டு தலைவர்களின் வாழ்த்துகள் 

           நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அபார வெற்றி பெற்றார் இதனை தொடந்து உலக தலைவர்களும் அனைவரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

             அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அமெரிக்க- இந்திய உறவில் மகத்தான ஒத்துழைப்பு ஏற்படும் என்றும்  டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

          டிரம்ப்பின் வாழ்த்துக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த வெற்றி 130 கோடி இந்திய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறிய அவர், அமெரிக்காவுடன் நட்பை மேம்படுத்தவும் உலக அமைதிக்காக ஒன்றுபட்டு செயல்படவும் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :