ரஃபேல் வழக்கில் மோடியை விமர்சித்ததிற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

Home

shadow

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று வருத்தம் தெரிவித்தார்.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளியே திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவில் அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை எனக் கூறி, ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணையின் போது 22-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தான் கூறிய கருத்திற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டதாகவும், இருந்தாலும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான செய்திகள் :