ரயில் டிக்கெட் முன்பதிவு சலுகை

Home

shadow


 

டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, வங்கி பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கபடமாட்டாது  என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

 

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் நாள்தோறும் 7 லட்சம் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கான கட்டணம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட தொகையை, பரிவர்த்தனை கட்டணமாக, சம்பந்தப்பட்ட வங்கிகள் வசூலிக்கின்றன. கிரெடிட் கார்டு மூலமான, பரிவர்த்தனை கட்டணமாக, 1 புள்ளி 8 சதவீத தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் டெபிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் வங்கிகளுக்கு ஏற்ப வசூல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக பயணிகள் அளித்த புகாரின் பேரில், டெபிட் கார்டு மற்றும் இ - வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு  ஐ.ஆர்.சி.டி.சி., கடிதம் அனுப்பியிருந்தது. அதன் பேரில் தற்போது டெபிட் கார்டு மற்றும் இ - வாலட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்தியுள்ளன.


இது தொடர்பான செய்திகள் :