ரயில்வே புகார் - புதிய செயலி

Home

shadow


ரயில்வே பயணிகள் அனைத்துவிதமான புகார்களையும் அளிக்க இந்திய ரயில்வே துறை புதிய செயலியை உருவாக்கியுள்ளது. எம்..டி..டி. எனப் பெரிடப்பட்டுள்ள இந்த செயலி இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்களில் கழிவறை சுத்தம், உணவுகளின் தரம், அவசர உதவி என அனைத்துக்கும் தனித்தனி புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மாற்றாக அனைத்துவிதமான புகார்களையும், தெரிவிக்கும் வகையில் இந்திய ரயில்வே துறை புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் தங்களின் பயணத்தின் போது, தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள், உணவு குறித்த புகார்கள், கழிப்பறை குறித்த புகார்கள், ரயில்பெட்டிகளில் சுத்தம், பாதுகாப்பு தொடர்பான புகார்கள் அனைத்தையும் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் அனைத்தும் அந்தந்த குறிப்பிட்ட துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் மாற்றப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் அவசர நேரத்தில் இதில் இருந்தே புகார்கள் அளிக்கலாம். பயணிகள் தாங்கள் கொடுத்த புகார்கள் எந்த அளவில் இருக்கிறது, அது பரிசீலிக்கப்பட்டதா, அதன் நிலை என்ன என்பது குறித்தும் இந்த செயலியில் தெரிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பான செய்திகள் :