ராகுல் காந்தியின் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் ஊழலுக்கு வழி வகுக்கும் திட்டம்

Home

shadow

ஏழை மக்களுக்காக காங்கிரஸ் அறிவித்துள்ள "நியாய்' திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அளித்த பேட்டியில்  " மக்களின் வருவாய், ஊதிய அளவுகள் தொடர்பான தரவுகள் எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸின் "நியாய்' திட்டம் செயல்படுத்த முடியாத வாக்குறுதி என்பதே தனது கருத்து எனவும்  நாட்டின் பொருளாதாரம், நிதி சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகினால், இத்திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார். மேலும் இத்திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வில் முற்றிலும் ஊழல்தான் நிறைந்திருக்கும் என தெரிவித்த அவர்  காங்கிரஸ் கட்சியின் பிரபலமான ஊழல்களின் வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும் என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மூன்று தலைமுறைகளாக பெரிய வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், சராசரிக்கும் கீழான, ஊழல் மிகுந்த ஆட்சியையே அவர்களால் தர முடிந்தது எனவும்  இது, நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :