ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Home

shadow

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங் மாநிலத்தில் காலியாக உள்ள  மூன்று மக்களவை தொகுதிகளுக்கு ஜனவரி 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜஸ்தானின் அல்வார், ஆஜ்மீர், மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உலுபெரியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளுக்கும், ஜனவரி 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும் என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 15 தேதி கடைசி நாள் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, மூன்று மக்களை தொகுதியிலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள.

இது தொடர்பான செய்திகள் :