ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 32 ஆக உயர்வு; பிரதமர் இரங்கல்

Home

shadow

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சபாய் சவாய் மதோபூர் நகரில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லால்சாட் நோக்கிப் புறப்பட்ட  பேருந்து துபி என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பனாஸ் ஆற்றிற்குள் விழுந்தது. இதனால்  உள்ளே இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இந்த  விபத்து மனவேதனை அளிப்பதாக கூறியுள்ள மோடி, தன்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :