ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை சட்டசபை தேர்தல்

Home

shadow

 

ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை மாலையுடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக, நாளை  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 200 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணமடைந்து விட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 189 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2 அயிரத்து 274 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுகுறித்து ராஜஸ்தான்  மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் குமார் கூறுகையில் இந்த தேர்தலில் 4 கோடி 77 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தலுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், அக்கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா, உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட், உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரம் செய்தனர். இதேபோல், தெலங்கானாவிலும் மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அங்கு பிரசாரம் மேற்கொண்டனர். பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றனர். ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளும், வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :