ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்ய மறுப்பு

Home

shadow


       ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதுதொடர்பான மனுவில், ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது என்றும், இந்த முடிவு தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :