ரிசர்வ் வங்கியிடமிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயைக் கேட்டு மத்திய அரசு நெருக்கடி - ராகுல்காந்தி

Home

shadow

                        ரிசர்வ் வங்கியிடமிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயைக் கேட்டு மத்திய அரசு நெருக்கடி அளித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள 9 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், இதனைத் தர ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் தவறான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தீர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.  இதற்கு நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசு தன்னிச்சையான அமைப்புகளை அழித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேசத்தை காக்க எதிர்த்து நிற்குமாறு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு டுவிட்டரில் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :