லண்டன் – நிரவ் மோடி கைது

Home

shadow

 

        பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீஸின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை கடந்த 18-ஆம் தேதி பிறப்பித்தது.  இதனால் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல் உறுதியானது. இந்நிலையில், லண்டனில் வைத்து நிரவ் மோடி இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :