வங்கி கடன் மோசடி குற்றவாளி நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சொத்துகள் முடக்கம்

Home

shadow

                    வங்கி கடன் மோசடி குற்றவாளி நீரவ் மோடிக்கு சொந்தமான 56 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாக உள்ளார். அவரை மீண்டும் இந்தியா கொண்டு வர அமலாக்க துறை மற்றும் சிபிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்க துறை முடக்கி வருகிறது. அந்த வகையில்நீரவ் மோடிக்கு சொந்தமான துபாயில் இருந்த 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. தற்போது வரை நீரவ் மோடிக்கு சொந்தமான 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :