வங்கி கடன் மோசடியாளர் நீரவ் மோடியை லண்டனில் இருந்து நாடு கடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - வெளியுறவுத் துறை

Home

shadow

                        வங்கி கடன் மோசடியாளர் நீரவ் மோடியை லண்டனில் இருந்து விரைவில் நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் சென்று பதுங்கிக் கொண்டார். அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பலனாக, நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த அந்நாட்டு காவல் துறை, சிறையில் அடைத்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், நீரவ் மோடியைக் கைது செய்வதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை எனவும்,  சில சட்ட நடைமுறைகள் முடிவடைவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும், அவை முடிந்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவித்தார். இதேபோல், அவரை விரைவில் நாடு கடத்திக் கொண்டு வருவதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும், அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :