வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம்

Home

shadow


பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தேவை என அதன் ஆளுநர் உர்ஜித் படேல், நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது வங்கிகளிடம் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்தனபஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேடு, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது உள்ளிட்ட வங்கித் துறை தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து உர்ஜித் படேலிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பத் திட்டமிட்டது. அதற்காக அவரை நேரில் ஆஜராகுமாறு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, உர்ஜித் படேல் டெல்லியில் நிலைக் குழு முன்பு நேற்று ஆஜரானார். வங்கி முறைகேடுகள் குறித்தும், அண்மையில் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு நிலவியது குறித்தும் வீரப்ப மொய்லி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உர்ஜித் படேல், அந்த விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நிறுவன திவால் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு வாராக் கடன் பிரச்னை சற்று குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை சீராகும் என்றும் அவர் கூறினார். பொதுத் துறை வங்கிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அதிகாரம் ரிசர்வ் வங்கி வசம் இல்லை என்றும், அதனை வழங்க வேண்டும் என்றும் உர்ஜித் படேல் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான செய்திகள் :