வணிகர்கள் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒப்பானவர்கள் - பிரதமர் நரேந்திர மோடி

Home

shadow

                    பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் வரை கடன், ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான  விபத்துக் காப்பீட்டு, கடன் அட்டை , சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.


அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய வணிகர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி வணிகர்கள், வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒப்பானவர்கள் எனவும் எதிர்காலத்தை நன்கு கணிக்கத் தெரிந்த அவர்கள், பருவ காலங்களுக்கு ஏற்ப தேவையான பொருள்களை முன்பே வாங்கி வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் என தெரிவித்தார். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வணிகர்களிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் எனவும் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வின்போது மக்களை திருப்திப்படுத்த வணிகர்களை குறை சொல்லும் வழக்கம் இருந்ததாக தெரிவித்தார். மேலும்  கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தேவையற்ற 1,500 விதிகளை குப்பைக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்த அவர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் வரை கடன், ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான  விபத்துக் காப்பீட்டு, கடன் அட்டை , சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்வணிகம் எளிமையாக்கலில் உலக நாடுகளில் 77-ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 65-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது எனவும் அடுத்த 5 ஆண்டுகளில் 50-ஆவது இடத்தை பிடிக்க வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்றுமதியை 2 மடங்காக்குவோம் எனவும் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :