வரதட்சணைக் கொடுமை குறித்து புகாரளித்ததும் உடனடியாகக் கைது - உச்ச நீதிமன்றம்

Home

shadow


      வரதட்சணைக் கொடுமை குறித்து புகாரளித்ததும் உடனடியாகக் கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


     வரதட்சணைக் கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாகக் கைது செய்ய தடை விதித்தும் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது


     வரதட்சணைக் கொடுமை செய்ததாக பெண்கள் அளிக்கும் பொய் புகார்களால், குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதால், வரதட்சணைக் கொடுமை புகாரில் உடனடியாகக் கைது செய்யக் கூடாது என்றும், கைது செய்வதற்கு முன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


     இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கலாம், எனவும் புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :