வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை கடுமையாக கையாளுங்கள் - நிர்மலா சீதாராமன்

Home

shadow

    வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள், கடுமையாக கையாளுங்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.


ஆண்டுதோறும் ஜூலை மாதம் 24-ஆம் தேதி வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நேற்று நடந்த கொண்டாட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர், வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களை கடுமையாக கையாளுங்கள் என்றும் நேர்மையாக வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கூறினார். வருமான வரித்துறையின் வரம்புக்குள் இருப்போரின் எண்ணிக்கையை பிரதமர் மோடி விரும்புகிறபடி, தற்போதைய 8 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். இந்த நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் வசூல் இலக்கு 13 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் என்று பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள் இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான் என்றும், ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் வரி வசூலை வருமான வரித்துறையினர் இரு மடங்காக்கி இருப்பதாகவும் அவர் பாராட்டினார். வரி என்பது தண்டனையாக வசூலிக்கப்படுவதில்லை எனவும்  நிறைய சம்பாதிப்பவர்கள் நாட்டை கட்டமைப்பதில் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வசூலிக்கப்படுகிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார். 

இது தொடர்பான செய்திகள் :