வாக்காளர் பட்டியலில் நாடு முழுவதும் 89 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் - தேர்தல் ஆணையம் தகவல்

Home

shadow

வாக்காளர்கள் பட்டியலில் நாடு முழுவதும் மொத்தம் 89 கோடி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 17-ஆவது மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது. அப்போது,  2014- ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 83 கோடியே 40 லட்சம்  வாக்காளர்கள் இருந்ததாகவும், 2019 ல் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 6 லட்சமாக அதிகரித்திருக்கிறது எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில்தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் 2019- ல்  வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதல் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் மொத்தம் 10 லட்சத்து 35 ஆயிரத்து 919 வாக்குச் சாவடிகள் உள்ளதாகவும் பொது வாக்காளர்கள் 89 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 899 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறுனுடன்கூடிய பொது வாக்காளர்கள் 45 லட்சத்து 63 ஆயிரத்து 905 பேர் உள்ளது என்றும் வெளிநாட்டில் உள்ள இந்திய  வாக்காளர்கள் மொத்தம் 71 ஆயிரத்து 735  பேர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பணி வாக்காளர்கள் 16 லட்சத்து 62 ஆயிரத்து 993 பேர் எனவும் 2019-க்கான வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் 89 கோடி 78 லட்சத்து 11 ஆயிரத்து 627 பேர் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :