வாஜ்பாயின் திருவுருவ படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது

Home

shadow

                       மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவ படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் படி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு வாஜ்பாயின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வாஜ்பாய் தனது அரசியல் பயணத்தில் நீண்ட நாட்கள் எதிர்க்கட்சி தலைவராகவே இருந்ததாகவும், எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாகவும், தனது கொள்கையில் இருந்து அவர் ஒரு போதும் விலகியதில்லை என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், வாஜ்பாஜ் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் வகையில் பேசினாலும், அவர்களோடு ஒரு போதும் பகைமை பாராட்டியது கிடையாது என தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :