வாரணாசி - பாலம் இடிந்தது

Home

shadow

 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை, பாலத்தின் ஒரு  பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்சி 16 பேர்  உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :