விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு - உச்ச நீதிமன்றம்

Home

shadow

 

     இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


      கடந்த 1994ம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் சிலவற்றுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் தொழில்நுட்பங்களை அளித்ததாக, கேரள காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


     இதுதொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், நம்பி நாராயணன் நிரபராதி என உறுதியான நிலையில், தன் மீது பொய் வழக்குத் தொடுத்ததற்கு கேரள அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்தார். 


    வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்று முடித்து வைத்துள்ளது. 


     மேலும், தவறான வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தவறான வழக்குப் பதிவு செய்த காவல்துறை மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவெடுக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :