வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரத்தின்போது வாங்கும் பொருள்களின் விலைப் பட்டியல் நிர்ணயம்

Home

shadow

          வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரத்தின்போது வாங்கும் பொருள்களின் விலைப் பட்டியலை நிர்ணயித்து தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

            

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது வாங்கும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி  மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, தண்ணீர், இளநீர், சால்வை, பேனர், போஸ்டர், துண்டுப் பிரசுரம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக விலை வழங்கப்பட்டுள்ளது. மட்டன் பிரியாணி  விலை  200 ரூபாயாகவும்சிக்கன் பிரியாணி  விலை 180 ரூபாயாகவும், காலை உணவு விலை  100 ரூபாயாகவும்வெஜிடபிள் பிரியாணி விலை  100 ரூபாயாகவும், மதிய உணவு விலை  100 ரூபாயாகவும், வெஜிடபிஸ் ரைஸ் விலை  50 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல்  டீ, காபி, குளிர்பானங்களுக்கான விலை லிட்டருக்கு  75 ரூபாயாகவும், தண்ணீர் பாட்டில் விலை லிட்டருக்கு  20 ரூபாயாகவும்,இளநீர்  விலை 40 ரூபாயகவும், சால்வை விலை  150 ரூபாயாகவும், புடவை விலை  200 ரூபாயாகவும், டி.சர்ட் விலை  175 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூக்கள், தொப்பிபிளீச்சிங் பவுடர் , பூசணி,  வாழைமரம்தொழிலாளர்கள் சம்பளம் , டிரைவர் சம்பளம் , பட்டாசுகள்மேளதாளங்கள் கல்யாண மண்டபம் , .சி அறைகள் , எல்..டி திரைகள்  என ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :