வேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு

Home

shadow

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது ஏற்கனவே பணப் பட்டுவாடா புகார் உள்ளதால் அவர் வேட்புமனுவை  ஏற்க  கூடாது என சுயேச்சை வேட்பாளர் ஒருவர் புகார் செய்தார். இதனை அடுத்து, திமுக ஆதரவு வேட்பாளர் கதிர் ஆனந்த்  வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினராக இல்லாமல் ஏ.சி.சண்முகம் எப்படி இரட்டை இல்லை சின்னத்தில் நிற்கமுடியும் என கேள்வி எழுந்துள்ளது. அதனால் அவருடைய வேட்பு மனு பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள்  நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :