வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது - குடியுரிமை அனுமதி கழகம்

Home

shadow

                   வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளதாக குடியுரிமை அனுமதி கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புள்ளி விவர அடிப்படையில், 2014 ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 76 .யிரமாக இருந்தது. இது 2018-ஆம் ஆண்டு நவம்பர் 30-இல் 2 லட்சத்து 95 ஆயிரமாக குறைந்துள்ளது. 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018-இல் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 62 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.இது தொடர்பாக மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில்,. எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக உண்டான பொருளாதார தாக்கத்தால்  வளைகுடா நாடுகள் ஒப்பந்த காலத்தை குறைத்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும் அதனால் வளைகுடா நாடுகள் பெரும்பாலான அரசு மற்றும் பொதுத்துறை பதவிகளை தங்கள் நாட்டினரை கொண்டு நிரப்ப இலக்கு நிர்ணயித்திருப்பதுவுமேஇதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :