ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்

Home

shadow

           ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்

 

          ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

 

        கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

 

         பாகிஸ்தான் வான் வழியாக அவர் செல்வதற்கு அனுமதியை பாகிஸ்தான் அளித்த போதிலும், அவர் ஈரான் மற்றும் ஏமன் வழியாக கிர்கிஸ்தான் செல்கிறார்.

 

         மாநாட்டின் இடையே ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புதின் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

 

        மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை, பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :