ஹரியானாவில் 6 பேர் கொலை.

Home

shadow

ஹரியானா அருகே முன்னாள் ராணுவ அதிகாரி மருத்துவமனைக்குள் புகுந்த 6 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

          ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள், கையில் கம்பியுடன் புகுந்த அடையாளம் தெரியாத நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

         இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில், கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர், முன்னாள் ராணுவ அதிகாரி என்பது தெரியவந்தது. அவர் பெயர் நரேஷ் தங்கார் என்பதும், மனைவி பிரிந்து சென்றால், ஆத்திரத்தில் இந்த கொலைகளை செய்ததும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நரேஷ் தங்காரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :