ஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..!

Home

shadow

கடந்த 10ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வண்ணங்களின் திருவிழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகையானது ஒருவர் மற்றவர்கள் மீது வண்ணகளை பூசி ஆரவாரத்துடன் கொண்டாடும் பண்டிகை ஆகும். வண்ணங்கள் மகிழ்ச்சியையும் நேர்மறை சிந்தனையையும் வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்தே ஹோலி பண்டிகையை கொண்டாடுகின்றனர். மேலும் பொது இடங்களிலும் பல்வேறு நபர்கள் ஹோலியை கொண்டாடுவது உண்டு, ஆனாலும் அதன் மூலம் மற்றவர்கள் பாதிக்கப்படாத விதத்திலையே கொண்டாடப்படும்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி சண்டிகர் மாநிலத்தில் சாலை பகுதிகளில் ஹோலி கொண்டாடிய இளைஞர்கள் சாலையில் செல்பவர்கள் மீதும் வண்ணங்களை பூசியுள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணின் மீது அத்து மீறி அவரது விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக வண்ணம் பூசிய வீடியோ தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..

இது தொடர்பான செய்திகள் :