‘சி.பி.ஐ வேண்டுமென்றே வழக்கை குழப்பியதா?’: 2ஜி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

Home

shadow

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தரப்பு தவறிவிட்டது என நீதிபதி சைனி தெரிவித்தார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “2ஜி ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. நாட்டையே உலுக்கியதுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீழ்வதற்கும் காரணமாக இருந்தது. இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ வேண்டுமென்றே இந்த வழக்கில் குழப்பியுள்ளதோ? மக்களுக்கு பதில் வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :