'பிரதம மந்திரி முத்ரா திட்டம்' திட்டம் என்ற நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

Home

shadow

 

         முத்ரா நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களால் ஏற்பட்ட வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கை விட குறைவாகவே உள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், 'பிரதம மந்திரி முத்ரா திட்டம்' என்ற நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, 'சிஷூ, கிஷோர், தருண்' என, மூன்று பிரிவுகளின் கீழ், கடன் வழங்குகின்றன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் முதல், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தில், இந்தாண்டு, மார்ச், 22-ஆம் தேதி நிலவரப்படி, 2 லட்சத்து 73 ஆயிரம்  கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முத்ரா மற்றும் விவசாயிகளுக்கான, 'கிரெடிட் கார்டு' திட்டங்களில், வாராக்கடன் பெருகி வருவது குறித்து, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், கடந்த ஆண்டு, நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், வங்கிகள், கடன் வளர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சரிவர ஆராயாமல் தாராளமாக கடன் வழங்குவது ஆபத்து என்றும், அதனால், வருங்காலத்தில் வாராக்கடன் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில், முத்ரா திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளதை விட, குறைவாகவே உள்ளது என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய, 'பேசல்' விதியில் நிர்ணயிக்கப்பட்டதை விட, முத்ரா திட்டத்தில் வாராக் கடன், 5 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :