15 வயதேயான பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் தன்னுடைய செயல்பாடுகளால் உலக நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்

Home

shadow

 

பருவநிலை மாற்ற பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை விட, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தான் தற்போது மிகவும் அவசியம் என சிஓபி 24 மாநாட்டில் 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.


ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 15 வயதேயான பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் தன்னுடைய செயல்பாடுகளால் உலக நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சுற்றுச் சூழல் ஆர்வலரான கிரேட்டா, பருவநிலை மாற்றத்தை தடுக்க கோரி பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு அமர்ந்து, அந்நாடு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைய வேண்டும் என கோரி போராட்டம் நடத்தி வருகிறார். போலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சிஓபி 24 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கிரேட்டா, நேற்று அங்கு உலக வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பருவநிலை மாற்ற பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை விட, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தான் தற்போது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார். தேர்தலில் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதே மட்டுமே அரசியல்வாதிகள் தங்கள் பணியாக கொண்டிருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பான செய்திகள் :