2 ஜி தீர்ப்பு தலைவர்கள் கருத்து

Home

shadow

தீர்ப்பு குறித்து கருத்துக் கூறியுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப் பெரிய ஊழல் என்று அடிப்படை ஆதாரமில்லா பிரச்சாரத்திற்கு எதிரான தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பழிசுமத்திய பாரதிய ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலும், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது நிரூபணமாகி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கூறி உள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததால்தான் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்ததாக கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர்கள் சிறு கவுரவமாக கருதிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

2 ஜி தீர்ப்பு குறித்து, அநீதி வீழும், அறம் வெல்லும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கையெழுத்து மூலம் கருத்துத் தெரிவித்துள்ளார்.  நியாயம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளதாகவும்,  திமுகவிற்கு கிடைத்த பெரிய வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்று கூறியுள்ள பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஊழலை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2 ஜி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரும்,  தீர்ப்பு திமுகவிற்கு மேலும் பலத்தை அதிகரிக்கும்  என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு தனது நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :