2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லையே தவிர குற்றம்மேநடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை: நீதிபதி ஜி.எஸ்.சிங்வி

Home

shadow

2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே தவிர,  குற்றம் நடைபெறவே இல்லை என்று கூறவில்லை என அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கூறியுள்ளார். நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 2 ஜி வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அலைக்கற்றை உரிமத்தை ரத்து செய்த அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கருத்துத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்ய விசாரணை அமைப்புகள் தவறிவிட்டன என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். குற்றம் நடைபெறவில்லை அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற இரண்டு அம்சங்கள் மட்டுமே குற்றவியல் சட்டம் என்று கூறிய அவர் 2 ஜி வழக்கை பொறுத்தவரை, குற்றம் நடைபெற்றுள்ளது ஆனால் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ஒருவர் குற்றம் செய்திருந்தாலும் சாட்சிகள் இல்லை என்றால் அவரை தண்டிக்க முடியாது என்ற நிலையே இந்தத் தீர்ப்பிலும் எதிரொலித்திருப்பதாக நீதிபதி சிங்வி கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :