2ஜி தி.மு.க.கொண்டாட்டம்

Home

shadow

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருந்ததால் தி.மு.க.வும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என்ற ஒற்றை அறிவிப்புடன் எழுந்து சென்றார். தீர்ப்பின் தகவல் அறிந்ததும் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை, பெரம்பலூர் உட்பட தமிழகம் முழுவதும் அந்த கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் இத்தீர்ப்பை கொண்டாடினர். இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்   செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தி.மு.க.வை அவமானப்படுத்தி அழிக்க நினைத்து திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் 2 ஜி என்றார். பொய்யான கணக்குகளுடன் திரிக்கப்பட்ட இந்த வழக்கில் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :