2019 முடிவதற்குள் 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்கிறார் பிரதமர் மோடி

Home

shadow

மக்களவைத் தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக அரசு. பிரதமர் மோடி 26ம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். 
2வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்களின் வெளிநாடு பயணங்கள் குறித்த ஒரு விரிவான அறிக்கையை தற்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையில் 7 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அவர்கள் செல்ல உள்ளார். 

ஜூன் 13-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

ஜூன் 28, 29 தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவிற்கும் மூன்றாவது வாரத்தில் நியூயார்க்கிற்கும் செல்லவுள்ளார்.

நவம்பர் 4லில்  பாங்காங்க் , 11ஆம் தேதி பிரேசிலும் செல்கிறார் பிரதமர் மோடி. 

இதற்கு முன்னதாக இந்தியாவின் அண்டை நாடுகளான  ஸ்ரீலங்கா அல்லது பூட்டானில்  ஏதேனும் ஒரு நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :