2024ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் – நிர்மலா சீதாராமன்

Home

shadow

                  ‘ஹர் கல் ஜல்’ திட்டத்தின் மூலம் 2024ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும், குழாய் மூலமாக சுத்தமான குடிநீர் வழங்கப்படுமென மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 – 2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க புதிதாக ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களில் உள்ள ஓவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலமாக குடிநீர் அளிப்பதற்கு 2020ஆம் ஆண்டிற்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

மேலும், 2024ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், ‘ஹர் கல் ஜல்’ திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படுமென நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :