3 ஆயிரம் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Home

shadow

மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு காணப்படுவதாக கூறியுள்ளார். இதனால், கடந்த மாதம் 1-ம் தேதி முதல் டிசம்பர் 21- வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் மூவாயிரத்து 119 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் நிலவிய  பனிப்பொழிவால் பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பனிப்பொழிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ரயில் ஓட்டுநர்களுக்கு ஜி.பி.எஸ்.கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பியூஸ் கோயல் தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு  ரயில்வே இணையமைச்சர், ராஜன்  கோஹைன், அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 'ஆர்த்ரைடிஸ் எனப்படும், மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு, சிறப்பு ஒதுக்கீடு  மற்றும் கட்டண சலுகை அளிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :