400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

Home

shadow

                    400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் உள்ள பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி படிப்படியாகக் குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், 400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி படிப்படியாக 25 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மற்ற பெரு நிறுவனங்களுக்கும் படிப்படியாக வரி குறைக்கப்படும் என்றும், செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார். முன்னதாக தனது முதல் பட்ஜெட்டில் 400 கோடி ரூபாய்க்குள் கீழ் விற்பனை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார் நிர்மலா சீதாராமன். அதற்கு முன்பு, முந்தை பாரதிய ஜனதா ஆட்சியில் 250 கோடி ரூபாய்க்கு கீழ் விற்பனை வருமான உள்ள பெரு நிறுவன வரி 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :