7.5% பொருளாதார வளர்ச்சி: பன்னாட்டு நிதியம்

Home

shadow


     அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

     சர்வதேச நாடுகளின் நிதிச் சூழல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பான அறிக்கையை பன்னாட்டு நிதியம் வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்தியா எதிர்கொண்டு வரும் வங்கி மோசடிகள், பெரு நிறுவன கடன் ஏய்ப்பு விவகாரங்கள் ஆகியவையும் நிதிச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், வாராக்கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும், வங்கியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த்து. மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கும் எனவும் என்று பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :