70 ஆண்டுகளில் நடைபெறாத மாற்றம் 70 நாட்களில் நடைபெற்றுள்ளது - பிரதமர் மோடி

Home

shadow

          கடந்த 70 ஆண்டுகளில் நடைபெறாத மாற்றம் புதிய அரசு அமைந்த 70 நாட்களில் நடைபெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். 6-வது முறையாக தேசிய கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அவர், சகோதர, சகோதரிகளின் பந்தத்தை உணர்த்தும் இந்த நாளில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என தெரிவித்தார். விடுதலைக்காக பலர் தங்கள் வாழ்வை தியாகம் செய்துள்ளதாகவும், விடுதலைக்காக போராடியவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பதாகவும் கூறினார். அனைத்து பிரிவினருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். முத்தலாக் தடை சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் கொண்டாடி வருவதாகவும், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை நாட்டு மக்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். குழந்தைகள் நலனுக்காகவும், பாலியல் கொடுமைக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படும் என தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும், மக்களின் நலனுக்காக சேவையாற்ற அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பின் ஒரு இழையைக் கூட தவற விடமாட்டோம் என கூறினார்.  தேசம் மாறும் என்ற நம்பிக்கையும், புதிய பலமும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.  புதிய அரசு அமைந்த பின்னர் மக்கள் தங்கள் கெளரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காக, முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் நடைபெறாத மாற்றம் புதிய அரசு அமைந்த 70 நாட்களில் நடைபெற்றுள்ளதாகவும், 130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற தனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அரசமைப்பு சட்டம் 370 ரத்து செய்யப்பட்டது, காஷ்மீர் மக்களுக்கு பலன் அளிக்க கூடியது என்றும், பிரிவு 370-வது நீக்கம் மூலம் வல்லபபாய் படேலின் கனவு நனவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவும் நனவாகி உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மிகவும் அசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.    

இது தொடர்பான செய்திகள் :