உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் ராஜினாமா

Home

shadow

1. 

      உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக வங்கியின் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் முடிவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காகவே கிம் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகவும், வேறு நிறுவனம் ஒன்றில் இணைந்து வளர்ந்து வரும் நாடுகளின் உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் பணியில் கிம் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொடர் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கிம் பதவி விலகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இது தொடர்பான செய்திகள் :