ஆப்கானிஸ்தான் - அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

Home

shadow


        மாஸ்கோவில் நடைபெற்ற ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தரப்பினர் மற்றும் தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கான் நாட்டில் நடைபெற்று வரும் 18 ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வர தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் கத்தாரில் தாலிபான் பயங்கரவாதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ஆப்கன் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையேயான பேச்சுவார்த்தை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தரப்பினர் மற்றும் தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட  கூட்டு அறிக்கையில், ஆப்கானில் உறுதியான, அனைவரையும் உள்ளடக்கிய மத்திய அரசை கொண்டு வருவது, குடிமக்கள் குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது, கைதிகள் பறிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து பாதி அமெரிக்க படைகள் ஏப்ரல் மாதம் திரும்ப பெறப்படும் என அமெரிக்க அரசு தரப்பு உறுதியளித்ததாக தலிபான் பிரதிநிதிகள் தெரிவித்ததற்கு, அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :