இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு விலக்கு

Home

shadow

                      இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு விலக்கு அளித்துள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொண்டதை தொடர்ந்து அந்நாடு மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பிற நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்கா, அவ்வாறு தவறும் பட்சத்தில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு விலக்கு அளித்துள்ளது. இந்தியா, சீனா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய 8 நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சர்வதே அளவில் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் ஈரானின் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்பதே  தங்கள் நோக்கம் எனவும், விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :