இந்தோனேஷியா சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்

Home

shadow

 

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில்  இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே  7 மற்றும் 6 ஆக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


சமீபத்தில்  இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின்  தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் இன்று மீண்டும்  அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால், 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இன்று அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகியது இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும்  விடப்பட்டுள்ளது.எனினும்  அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள்  இன்னும் வெளியாகவில்லை

இது தொடர்பான செய்திகள் :