உலகம் - புத்தாண்டு கொண்டாட்டம்.

Home

shadow

உலகின் முதல்நாடாக நியூசிலாந்து புத்தாண்டை கொண்டாடியது. ஆக்லாந்து நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அந்நாட்டு மக்கள் 2018ஆம் ஆண்டை கண்கவர் வாண வேடிக்கையுடன் வரவேற்றனர்.

ரஷ்யா நாட்டில் சில பகுதிகளில் மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. ரஷ்யாவில் புத்தாண்டையொட்டி கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் புத்தாண்டை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். வாணவேடிக்கை மற்றும் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஜொலித்தது

     ஹாங்காங்கில் புத்தாண்டையொட்டி கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

ஸ்காட்லாந்தில் புத்தாண்டையொட்டி மக்கள் நூதன முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பழங்கால போர் வீர்ர்களை போன்று உடைகளை அணிந்து சாலைகளில் கோஷங்களை எழுப்பியவாறு சென்ற மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்இதேபோல் ஜெர்மனி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் புத்தாண்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :