கலிஃபோர்னியா மாகாணத்தில் வழக்கறிஞர் அலுவலக முன்னாள் ஊழியர் ஒருவர்,   மற்றொரு ஊழியரை துப்பாக்கியில் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Home

shadow

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாங் பீச் எனும் இடத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகம் ஒன்றிற்குள் நுழைந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கிருந்த மற்றொரு ஊழியரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.  சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன், துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ஊழியர், தன்னை தானே  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் பணி புரிந்த மற்றொரு ஊழியருக்கும் காயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :