சீனாவின் பட்டுச் சாலை திட்டம் பிற நாடுகளின் இறையாண்மையை பாதிக்காது - சீன வெளியுறவு அமைச்சர்

Home

shadow

          சீனாவின் பட்டுச் சாலை திட்டத்தால் பிற நாடுகளின் இறையாண்மை பாதிக்காது என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். 

பட்டுச் சாலைத் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்குபெறும் இரண்டாவது கூட்டம், வரும் 25 –ஆம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய , சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ, சீனாவின் வூஹான் நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது எனவும், இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவும், பரஸ்பர புரிதலும் மேம்பட்டது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பட்டுச் சாலை திட்டம் , மற்ற நாடுகளின் இறையாண்மையையும், பிராந்தியப் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், இத்திட்டம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்த எனவும் கூறினார். ஆனால், இந்தியா தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் இருந்தபோதிலும், இந்த விவகாரத்தால், இந்தியாவுடனான நல்லுறவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :