தெரசா மே ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த சில தகவல்களை மூடி மறைத்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்

Home

shadow

 

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரசா மே  ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த சில தகவல்களை மூடி மறைத்து, நாடுளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் என்று, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.


ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து  பெறப்பட்டுள்ள சட்ட ஆலோசனை முழுவதையும் தெரசா மே அரசு வெளியிட வேண்டும் என, அனைத்துக் கட்சிகளும் அழுத்தம் கொடுத்தது. சட்ட ஆலோசனை முழுவதுமாக வெளியிடப்படாவிட்டால் ,அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. எனினும், இந்த சட்ட ஆலோசனை ரகசியமாக காக்க வேண்டிய ஒன்று என ,தெரேசா மே தெரிவித்திருந்தார். இந்நிலையில் முழு ஆவணத்தையும் வெளியிடுவதற்கு நடத்தப்பட்ட  வாக்கெடுப்பை புறக்கணித்தாகவும், இது  நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் கூறப்பட்டதால் , ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பெறப்பட்ட சட்ட ஆலோசனைகள் அடங்கிய ,43 பக்க சுருக்கமான அறிக்கை  ஒன்று வெளியிடப்பட்டது. அதில் வடக்கு  அயர்லாந்துடனான கடினமான உறவு இந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்திலும் தொடர்வதாகவும், மேலும் ஐரோப்பிய யூனியனின் சுங்கவரிகளுக்கு இங்கிலாந்து காலவரையின்றி கட்டுப்பட்டுள்ளதாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார். இதனை மறைத்து மே நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் பிரதமர் தெரசா மே  நாடாளுமனற்றத்தின் உறுப்பினர்களிடமிருந்து பிரெக்ஸிட்  உடன்படிக்கை பற்றிய எந்த உண்மைகளையம் தான் மறைக்கவில்லை, என மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :