பாகிஸ்தான் தூதரகத்திற்கு செருப்பு அனுப்பி புதியமுறை போராட்டம்.

Home

shadow

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சர்வதேச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றம் தாயாருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 25-ம் தேதி சந்திப்புக்காக சென்ற அவர்களை, , புடவையை மாற்றச் செய்து, தாலி, குங்குமத்தை களையச் செய்து அவமரியாதையாக நடத்தியதுடன், சோதனை என்ற பெயரில் ஜாதவ் மனைவியின் செருப்பையும் பறிமுதல் செய்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துாதருக்கு பாரதிய ஜனதா  செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பக்கா செருப்புகளை அனுப்பி உள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,   செருப்பு தேவைப்படுவதால்தான் குல்பூஷண் ஜாதவ் மனைவியின் செருப்பை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே, ஒவ்வொருவரும் பாகிஸ்தானுக்குசெருப்பு அனுப்பி, அதனை ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :