பெத்தலகேமில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

Home

shadow

ஏசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாலஸ்தீனத்தின்  பெத்தலகேம், ஏசு பிறந்த இடமாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, பெத்தலகேம் தேவாலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏசு பிறந்த நேரத்தில் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். அதிபர் டிரம்பின் ஜெருசலேம் அறிவிப்பால் இந்த ஆண்டு கிறிஸ்துவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

      இதேபோன்று வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

இது தொடர்பான செய்திகள் :