போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு

Home

shadow

             போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மடெய்ரா தீவு மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும், இந்த சுற்றுலா தளத்திற்கு தினம் தோறும் நூற்றுகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மடெய்ராவின் தலைநகர் புஞ்சாலில் இருந்து, கடற்கரை நகரமான கனிகோவுக்கு ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கனிகோவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 18 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 27 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :